நீ
இருண்டு கொண்டிருக்கும்
ஈழத்தமிழர்
வாழ்வு ஒளிபெற
எரிந்து போன
சந்தனக் காடு ..
நாங்கள்
குரல் கொடுத்தோம்..
நீ
உயிர் கொடுத்தாய் ..
எல்லோரும்
உறவுகள் பற்றித்
தெரிந்து கொண்டிருக்க
உனக்குள்
மட்டும் பற்றி
எரிந்து கொண்டிருந்தது
உணர்வுத் தீ !
உன்னைச் சுட்ட
நெருப்பின் வடு
எங்கள் இதயத்தில்...
உன் தியாகம்
எழுச்சி கொண்டு
மலரவேண்டும் தமிழீழம்
நாளைய உதயத்தில்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment