Friday, February 13, 2009

நீதியின் மன்றத்தில்....


ஈழத்தீவை
சூழ்ந்திருப்பது
தண்ணீரல்ல ...
கண்ணீர்!!

எம் ரத்த
சொந்தங்களின்
உயிரடங்கும் ஓசை
செவிகளில் இரைச்சலாய் ....

சீதையை மீட்க
யுத்தம் அன்று;
சீதைகளை சிதைக்க
உதவி இன்று;
என்ன தேசம் ?
யார் ராஜ்ஜியம் ?

பிள்ளையைக் கொல்ல
கள்ளிப்பால் கொடுக்கும்
அன்னை...

பிள்ளைகளைக் கொல்ல
ஆயுதம் கொடுக்கும்
அன்னை தேசம் ...

நீதியின் மன்றம்
சொல்லட்டும்
ஒரே தீர்ப்பு...


14.12.2008. அன்று ராணி வார இதழில் வெளிவந்தது ....

No comments:

Post a Comment